திருவண்ணாமலை 26.4.2025 ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ராகு -கேது பெயர்ச்சி பூஜைகள் ஆரிய வைஸ்ய சமாஜத் தலைவர் A.C மணிகண்டன் அவர்கள் 2025 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தலைமையில் கலசம் வைத்து சங்கல்பம் செய்து ராகு -கேது பெயர்ச்சி பால், தயிர், இளநீர், தேன், பன்னீர்,பஞ்சாமிர்தம், சந்தனம், அபிஷேகம், சொர்ணாபிஷேகம் நடந்தது. ஹோமங்கள் வளர்த்து சங்கல்பம்,தோஷ நிவர்த்தி செய்து கணேஷ் ஐயர், பாலசுப்பிரமணி ஐயர் அவர்களால் சிறப்பாக செய்தனர். அபிஷேக, ஆராதனைகள், தீப ஆராதனைகள் , ஹோமங்கள் மற்றும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடத்தப்பட்டது. ஆரிய வைசிய சமாஜத்தினர் அனைவரும் பெண்கள் ஆண்கள் அனைவரும் கலந்து கொண்டு ராகு- கேது பெயர்ச்சி பூஜையில் அனைவரும் அருள் பெற்றனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டன.