வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோயில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோயில் ஆகும். இந்த கோயிலில் தொடர்ந்து பல்வேறு பூஜைகள், சிறப்பு அலங்காரங்கள், லட்சார்ச்சனை உள்ளிட்டவை நடந்து வருகின்றது. இந்நிலையில் சனிக்கிழமைகளில் பச்சை பட்டு உடுத்தியது போன்று துளசி மற்றும் வெற்றிலை அலங்காரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.