tamilnadu epaper

அதே பார்வை.....

அதே பார்வை.....

வகுப்பறையில்
தன் மகளைத் தேடும்

அம்மா...  போலவே

மனம் முழித்து நின்றது.

எட்டி எட்டி நின்ற
அவர்,

திரும்ப திரும்ப வந்து 
போகிறார் வாசலுக்கு .....

ஏன்....

என கேட்டு விட மனதுக்கும்
தோன்றவில்லை....

இல்லை என பதில் சொல்ல
அவருக்கும் தெரியவில்லை.

அந்த ஐந்து நிமிடங்கள்

நிறைமாத கர்ப்பிணி போல்
சுவாசமுட்டி நின்றேன்.

அதற்கும்

சுவற்றை ஒட்டிய , மாதுளைச் செடியில்

முகம் விரித்து தொங்கும்

பூவில் ....

தேன்சிட்டு குருவி திகட்டாமல் மது குடித்து
பறந்தது.

அடுத்த வீட்டு,

முகப்பில் 

ஒரு வருடத்திற்கு ......

நெஞ்சு குத்தலில் மூச்சை மறந்து போன 

கஸ்தூரி அத்தையின் முகம்,

யாரையோ எதிர்பார்த்து தொங்கி கிடந்தது.

இராஜேஷ்  சங்கரப்பிள்ளை

ஓவியம்: 'சித்ரலாயா '