tamilnadu epaper

அன்னை

அன்னை

கவிஞர் இரா .இரவி

மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்
மாதாவைத்தான் முதன்மையாகச் சொன்னார்கள்

அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம் என்றார்கள்
அன்னையைத்தான் முதன்மையாகச் சொன்னார்கள்

தாய் நாடு என்றுதான் அன்றே சொன்னார்கள்
தந்தை நாடு என்று எங்கும் சொல்வதில்லை

தாய் மொழி என்றுதான் எங்கும் சொல்கிறார்கள்
தந்தை மொழி என்று எங்குமே சொல்வதில்லை

நூலைப் போல சேலை தாயைப்போல பிள்ளை
தாயால் சிறந்தோர் தரணியில் மிகுந்தோர்

மாமனிதர் அப்துல் கலாம் முதல்
மண்ணில் பிறப்போர் சிறக்க காரணம் அன்னை

அன்பை விதைக்கும் அன்புச் சின்னம் அன்னை
அகிலம் போற்றிடும் அற்புத உறவு அன்னை

அன்னை இன்றி யாரும்பிறப்பதில்லை உலகில்
அன்னைக்கு இணையான உறவு இல்லை உலகில்

தாயுக்குத் தலை வணங்கினால் உலகம்
தலை வணங்கும் உன்னிடம்