நேரம் போதாது என நெஞ்சுக்குள் போராட்டம்.
நிதமும் இப்படியாக இருக்குது இவனின் என்ன ஓட்டம்.
உரையாடல்கள் தொய்வின்றி நடந்த போதும் போதவில்லை.
நிமிடங்களை நீலச்செய்ய சொல்லும் இதயத்துடி.
அன்றாட உன்னோடு உரையாடும் நாட்கள் எல்லாம் அழகானது.
அழகான நாட்களுக்கு நீண்டால் இன்னும் சுகமானது.
அன்பே என் வாழ்வில் சுகம் சேர்ப்பாயா.
இல்லை சுபம் என்று முடிப்பாயா.
கேள்விப் பதிலாய் எனக்குள் வேள்வி நடத்துது காதல்.
நான் மெல்லச் சாக, மேனி மெலிந்ததால் தீராத ஏக்கம்.
யாரடி நீ இத்தனை காலம் இப்படி இல்லை.
ஏக்கமும் எனது சொந்தம் இல்லை.
வலியை தந்து என்னை கொல்லாமல் கொள்கிறாய்.
உயிர்மொழி நிற்கும் முன் உயிரே எனக்குள் உறைவாயா?
கேள்வி மட்டும் இன்றும் தொடர்கிறது, கேள்வி அன்பால் பிறந்தது.
சாகுமுன் வரம் தந்து உன் மடியில் சாய்த்து கொள்.
மெல்லக் கொள்வதும் அள்ளிக் கொள்வதும் அன்பே உன் சொல்லில் நிகழும்....
வீ.கருப்பையா... கட்டிக்குளம்... சிவகங்கை...