யாரோ தூக்கி வீசி எறிந்த காகிதம்
காற்றில் மிதந்து
என் காலடி நோக்கி வந்தது
எடுத்துப் பார்த்தேன்
அதில்
எனக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் எழுதிய கவிதையில்
உந்தன் பெயர் இருந்தது
வாசித்துப் பார்த்தேன்
ஆஹா
வாழ்தல் இனிதடி கண்ணே
எப்போதும்
உன் நினைவுகளில் !!!

-சுபஸ்ரீஸ்ரீராம்