பாலூட்டி சீராட்டி
பாசத்தைக் காட்டியவள்
அப்பாவை அடையாளம் காட்டி ..அன்பு பாலம்
கட்டியவள்..
பசி மறந்து கண் விழித்து என்னை அணைத்து தன்னை மறந்தவள்...
தலைவாரி பூச்சூடி
பாடசாலை அனுப்பி
தலைவிதியை மாற்றியவள்...!
எத்தனை முறை தள்ளி வைத்தாலும்..பெற்றப்பிள்ளை கொள்ளிப்போட பித்தனைப்போல்
சொல்லி வைப்பவள்..
அந்த புனிதத்தாயின்றி
நாமேது?நானிலமேது?
-கவிஞர் இல.இரவி
செ.புதூர்-612203