'மாஸ்டர் செக்கப் ' செய்த கையோடு மருத்துவர் சொன்னார் 'அடிச்சு கொன்னாலும் சாக மாட்டீங்க , உங்க உயிருக்கு இன்னும் ஐம்பது வருடம் கேரண்டி .... !"
சந்தோசத்தில் திரும்பி பைக்கில் வீலிங் செய்தபடி வந்தவனுக்கு எமனாய் வந்தது எதிரில்
' டேங்கர் லாரி... !"
_-_-_-_-_-_-_-_-_-_-__-
பயம்-வெட்கம்
-----------------
பார்த்த முகங்களை தவிர ,பார்த்திராத புதிய முகங்களை காணும் குழந்தை...
தன் பாதுகாப்பிற்கு தாயின் முந்தானையை சுருட்டியபடி வெளியே எட்டிப் பார்க்கும் அதன் கண்களில்
பயம் கலந்த வெட்கம் !
___________________
எதிர்மறை
_____________
"அன்பு இல்லம் ' பெயர் தாங்கிய வீட்டில் கணவன் மனைவி பிரச்சனை !
"அன்னை இல்லம் ' பெயர் தாங்கிய வீட்டில் அன்னை முதியோர் இல்லத்தில் !
'குழந்தை இல்லம் '
பெயர் வைத்த வீட்டில் குழந்தைகள் சத்தம் அறவே இல்லை !
-எம்.பி.தினேஷ்.
கோவை - 25