ஒரே ஒரு நிமிடம் உன்னில் என்னை பொருத்திப் பார்த்தேன்!
என் தவறுகள் எனக்கு நன்றாக புரிந்தது. வெட்கினேன்.
நான் செய்த நற்செயல்கள் யாவற்றிற்கும் நானாகவே
வாழ்த்தி, சிரித்துப் பேசி, அன்பை பொழிந்து ஆறுதல் தேடிக்கொண்டேன்.
என்னுள் என்னை நான் காண்பதை விட வெட்ட வெளிச்சமாக
உன்னுள் இருந்து என்னைக் கண்டு மருகிப் போனேன் இவளா நான் என்று?
என்னை எனக்குப் புரிந்தது. உன்னை உனக்கு புரிய வேண்டுமா?
என்னுள் உன்னை பொருத்தி ஒருநாள் வாழ்ந்து பார் புரியும்!
-வி.பிரபாவதி
மடிப்பாக்கம்