இந்த இரண்டு பிளௌவ்ஸ்களையும் உடனே தச்சிக்கொண்டாங்க!" என்றாள் மனைவி.
கடை...கடையாய் ஏறி இறங்கினேன் ஒருத்தரும்" />
"இந்தாங்க, நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத்தெரியாது!..
இந்த இரண்டு பிளௌவ்ஸ்களையும் உடனே தச்சிக்கொண்டாங்க!" என்றாள் மனைவி.
கடை...கடையாய் ஏறி இறங்கினேன் ஒருத்தரும் உடனே தைக்க முடியாது.. ஒரு வாரம் ஆகும் என்றனர்.
எனக்கு தெரிந்த நண்பர் கூட அவசரமாக ஸ்கூல் யூனிஃபார்ம் தைக்க வேண்டியுள்ளதால் ..
உடனே முடியாது.. குறைந்தது இரண்டுநாள் கேட்டார்!
இது சரியாவராதுன்னு புதுக்கடை ஒன்றை அணுகினேன்...
"...சரி ஓ.கே. சார்!..நீங்க புது கஸ்டமரா வேற இருக்கீங்க!..உங்களை
விடவும் முடியலை!..
ஒரு நாள் அவகாசம் தரலாமா?.." என்று கேட்டார்.
"ம்....சரி! ஒருநாள் தானே!..இல்லை ஒரே நாளில் ...எனக்கு அது சரியாகப்பட ஓ.கே. என்று ஜாக்கெட் துணிகளை அவரிடம் கொடுத்துவிட்டு வந்து மகிழ்ச்சிப்பொங்க... மனைவியிடம் சொன்னேன்.
"சரி!..சரி!..நாளைக்கு பார்ப்போம்!" என்று முகத்தைத்திருப்பி அழகு காட்டிச்சென்றாள்.
மறக்காமல் மறுநாள் காலையிலே டைலருக்கு போன் செய்தேன்.."இன்னிக்கு கடை விடுமுறை!.." என்றார் கூலாக...
"ஐயய்யோ!..என்மனைவிக்கிட்டே இதை எப்படி சார் சொல்வேன்?..சரி..சரி..உடனே வந்து அளவு ஜாக்கெட்டையாவது எடுத்து
கொடுங்க!"என்று கத்தினேன்.
"ஸாரி சார்!..வெளியூரில் இருக்கிறேன் ஒரு நாள் அவகாசம் கொடுங்கள்!" என்றார் மீண்டும் கூலாக...
ஹேங்கானேன் நான்.
அய்யாறு ச.புகழேந்தி