சென்னை, மே 17–
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மைய தலைவர் அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை கிண்டியில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் 22ம் தேதி மசாலா பொடிகள் தயாரிப்பு பயிற்சியும், 23ம் தேதி இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது.
மசாலா பொடி தயாரிப்பு பயிற்சியில் சாம்பார் பொடி, ரசப்பொடி, சட்னி பொடி, இட்லி பொடி, கறிவேப்பிலைப் பொடி, எள்ளுப்பொடி, சிக்கன் மசாலா, மட்டன் மசாலா மற்றும் மீன் மசாலா தயாரிப்பது குறித்து கற்றுத் தரப்படும்.
இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு பயிற்சியில் லட்டு, பாதுஷா, பாதாம் அல்வா, மைசூர் பாகு, டிரை புரூட் லட்டு, பட்டர் முறுக்கு, காராபூந்தி, அவல் மிக்சர் மற்றும் ஓமபொடி பற்றிய விரிவான செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் 044–2953 0048 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.