சென்னை, மே 17–
சுற்றுலாத்துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. துறை செயலர் மணிவாசன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பங்கேற்றனர். கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், ‘‘சுற்றுலா பயணிகள், சுற்றுலா இடங்களில், மலையேறுதல், மலைப்பகுதிகளில் தங்குதல், நீர்சறுக்கு, அலைச்சறுக்கு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட புதிய அனுபவங்களை மேற்கொள்ள விரும்புகின்றார்கள். இதுபோன்ற சுற்றுலாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். புதிய சுற்றுலா தலங்களை கண்டறிந்து, அவற்றுக்கு உலக தரத்தில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.