tamilnadu epaper

உப்பு - இறைவனை உணர்த்தும் ஓர் அடையாளம்

உப்பு - இறைவனை உணர்த்தும் ஓர் அடையாளம்


*கடலில் இருந்து தோன்றிய மஹாலட்சுமியின் அம்சமாக 'உப்பு' சொல்லப்படுவதால்தான்உப்பைச் சிந்தக் கூடாது’ என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்தனர். உப்பைக் காலில் மிதிக்கக் கூடாது’ என்றும் சொல்வார்கள்*

.

*உப்பு உணவில் மட்டுமல்ல, நமது ஆன்மிக வாழ்விலும் முக்கியமானது. விதையும் இல்லாமல், மண்ணுமில்லாமல் கடலில் தோன்றும் இந்த 'அதிசய விளைச்சலை' வியக்காத ஞானியரே இல்லை*

*நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும்*

*உப்பு ஜீவாத்மாவைப் போன்றது*

*கடலே பரமாத்மா*

.

*'சமுத்திரமணி', 'நீர்ப்படிகம்', 'கடல் தங்கம்', 'பூமிகற்பம்', 'சமுத்திர ஸ்வர்ணம்', 'வருண புஷ்பம்’, 'சமுத்திரக்கனி', 'ஜலமாணிக்கம்' என்றெல்லாம் உப்பு போற்றப்படுகிறது.*

.

*வீட்டில், 'திருஷ்டி', 'துர்சக்திகள் தொல்லை' ஏதாவது இருந்தால், உப்பு நீரைப் பாத்திரத்தில் இட்டு, வீட்டின் மையத்தில் இருக்குமாறு வைத்து மூன்று நாள்கள் கழிந்த பிறகு கால்படாத இடத்திலோ, நீர் நிலைகளிலோ ஊற்றிவிடுவது தமிழர்களின் நெடுநாளைய வழக்கம்*

*இன்றும் திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுவது நாம் காணக்கூடிய நடைமுறையே. உப்பு துர்சக்திகளை, கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல்கொண்டது! இப்படிப்பட்டசிறப்புகளை பெற்ற உப்பின் பெருமைகளை நாம் உணராமல் இருப்போமேயானால், அது மிகவும் தப்பு!*



அனுப்புதல்:

ப. கோபிபச்சமுத்து,

பாரதியார் நகர்,

கிருஷ்ணகிரி - 1