எங்கள் ஊர் இலப்பைக்குடிகாடு பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் உள்ள முதல் நிலை பேரூராட்சி ஆகும்.பெரம்பலூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த இலப்பைகுடிக்காடு பேரூராட்சி, பெரம்பலூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
பெரம்பலூர்–தென் ஆற்காடு மாவட்ட எல்லையாக அமைந்துள்ள வெள்ளாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. மேற்கே திருமாந்துறையும், கிழக்கே
கீழக்குடிக்காடும், தெற்கே பென்னக்கோணமும், பெருமத்தூரும், வடக்கே வெள்ளாறும் அதற்கடுத்து கடலூர் மாவட்டத்தின் அரங்கூரும் அமைந்துள்ளது
4.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 8 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குன்னம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது
இலப்பைக்குடிக்காட்டிலிருந்து சென்னை, திருச்சி , பெரம்பலூர், வ. களத்தூர், தொழுதூர், வைத்தியநாதபுரம், திட்டக்குடி, விருத்தாசலம், அரியலூர் , துங்கபுரம், அத்தியூர், வேப்பூர், குன்னம், கிழுமத்தூர்,சு. ஆடுதுறை ஊராட்சி ஆகிய ஊர்களுக்குச் செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்து வசதி உள்ளது. எங்கள் ஊரில் இருந்து அரியலூர் ரயில் நிலையத்தை அரை மணி நேரத்தில் அடைந்து விடலாம். சிற்றுந்தில் 1 மணி நேர பயணத்தில் திருச்சி பன்னாட்டு மாநிலத்தை அடைந்து விடலாம். நான்கு மணி நேரம் பயணத்தில் சென்னை விமான நிலையத்தை அடைந்து விடலாம்.
எங்கள் ஊரில் மேற்கு ஜாமிஆ மஸ்ஜித்,
பந்தே நவாஜ் மஸ்ஜிது (தைக்கால் பள்ளி),
கிழக்கு ஜூம்மா பள்ளிவாசல்,
கிழக்கு பழைய பள்ளிவாசல்,
பிலால் பள்ளிவாசல்,
தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல்
போன்ற பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன.
உழவுத் தொழிலே பெரம்பலுார் மாவட்டத்தின் முக்கிய தொழிலாகும். எங்கள் ஊர் லப்பைக்குடிகாடு உள்ள பெரம்பலுார் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 1,75,739 ஹெக்டா். இதில் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு 93,581 எக்டேர் ஆகும். இந்த மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 861 மி.மீட்டா். இம்மாவட்டத்தின் முக்கிய பயிர்கள் பருத்தி கரும்பு மற்றும் மக்காச்சோளம் ஆகும். தமிழகத்திலேயே பருத்தி மற்றும் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படும்
மாவட்டமாக பெரம்பலுார் மாவட்டம் திகழ்கிறது. மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பரப்பில் 80 சதவீத அளவிற்கு மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது. மானாவாரி மாவட்டமாக இருந்தாலும் உணவு தானிய உற்பத்தியில் பெரம்பலுார் மாவட்டத்தில் சராசரியாக ஆண்டிற்கு 4.0 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்படுகிறது. சாகுபடிக்கு காவிரி ஆறு மிகவும்இன்றியமையாதது ஆகும். இங்கு முக்கிய பயிர்களான நெல், கடலை, கரும்பு, கம்பு மற்றும் முந்ரி அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. தற்போது 27% சோளத்தையும் 50% சின்ன வெங்காயத்தையும் உற்பத்தி செய்கிறது.
எங்கள் இலப்பைக்குடிகாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,
கே.எம்.ஏ. மருத்துவமனை,
தினகரன் மருத்துவமனை,
மகேந்திரன் மருத்துவமனை,
பிரியதர்ஷினி சேகர் மருத்துவமனை,
எஸ். எம். ஏ மருத்துவமனை,
தாஜ் பல் மருத்துவமனை,
இர்பா பல் மருத்துவமனை,
சுகம் மெடிக்கல் சென்டர்
பிரியா கிளினிக்,
ஹம்னா குழந்தைகள் மருத்துவமனை
ஜமாலி மருத்துவமனை
கிரஸென்ட் மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளும் மெடிக்கல்களும் உள்ளன.
பேரூராட்சி அலுவலகம், கிளை அஞ்சல் நிலையம், உதவி மின்செயற்பொறியாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம்,
கிளை நூலகம்,
பி.எஸ்.என்.எல் மின்னணுத்தொலைப்பேசி அலுவலகம்,
போன்ற அரசு அலுவலகங்கள் உள்ளன.
ஒவ்வொரு வாரமும் சனிக் கிழமை பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில் வாரச்சந்தை நடைபெறுகிறது. அக்டோபர் 05, 2019 முதல் ஜமாலி நகர் பூங்கா அருகே நடைபெற்று வருகின்றது.
கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,
பாரத ஸ்டேட் வங்கி,ஆக்சிஸ் வங்கி,
திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி,
தமிழ்நாடு கிராம வங்கி,,
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - ஊர் எல்லையில் (இருப்பு பென்னகோணம் ஊராட்சி) போன்ற வங்கிகள் எங்கள் ஊரில் செயல்படுகின்றன.
இலப்பைக்குடிகாடு இருக்கும் பெரம்பலூர் மாவட்டம் மிகவும் கனிம செழிப்பானது. செலஸ்டி, சுண்ணாம்பு கல், கங்க்கர் மற்றும் பாஸ்பேட் முடிச்சுகள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. குன்னம் மற்றும் வேப்பந்தட்டை போன்ற பகுதிகளில் செங்கற்கள் அதிகம் தயாரிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், பெரம்பலூர் தாலுகாவில் உள்ள லாடபுரம் பெரிய ஏரியும், வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள அரும்பாவூர் பெரிய ஏரியும், குன்னம் தாலுகாவில் உள வடக்கலூர் ஏரியும் என மொத்தம் 3 ஏரிகள் உள்ளன.
ArunpandianM
Mugavoor