தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு அருகில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
அழகிய பசுமைக்கும், அமைதிக்கும் பெயர் பெற்ற இந்த மலைகள்,
உலகம் முழுவதிலுமிருந்து இயற்கை காதலர்களையும் சாகசக்காரர்களும் தேடி வருகின்றனர்,
கொடைகானலில் இருந்து பூண்டி செல்லும் பாதைகள் எல்லாம் அழகு, வழியெங்கும் யூகாலிப்டஸ் மரங்கள் நம்மோடு பயணிக்கிறது, சிறிய அருவிகள் வரவேற்கிறது, பழனிமலை காட்சி முனை, இங்கிருந்து நாம் பழனி மலை முருகன் கோவிலை கான முடியும், பழனி ஊர் அவ்ளோ அழகு, மூடு பனி இல்லாத நேரம் தான் இங்கு குறைவு,
அடுத்து நாம் கூக்கல் எரியை அடையலாம், அழகிய தெளிவான நீரில் சுற்றி உள்ள மலை சிகரங்களை கண்ணாடி போல காணமுடியும், இங்கிருந்து 6 கிலோ மீட்டர் டிரக்கிங் அனுபவம் புதிது,
அடுத்து மன்னவனுர் ECO Tourism, குதிரை பயணம், படகு பயணம் என சொல்லிகிட்டே போலாம் அவ்வளவு பொழுதுபோக்கு அம்சத்துடன் அழகிய உன்னத காட்சிகள் கண்களுக்கு விருந்து,
அடுத்து நாம் அடைவது இந்த அழகிய பூண்டி என்னும் ஊர்..,
மற்ற எல்லா சுற்றுலா தளங்களில் இருந்து முற்றிலும் வேறு பட்டது இந்த பூண்டி, பூத்து குலுங்கும் வண்ணமலர்களும், பச்சை பசேல் என்ற மரம் செடி கொடிகளும் நம் மனதை மயக்குகிறது, கிழக்கே பெரியகுளமும், தெற்கே தேனியும், மேற்கே தேவிகுளமும் அமைத்த பகுதி,
மலைகளை செதுக்கி விவசாயம் செய்யும் முறை சொல்ல வார்த்தைகள் இல்லை, இங்கு அதிக அளவில் பூண்டு விவசாயம் செய்யப்படுகிறது, பூண்டு அதிகம் பயிரிட படுவதால் பூண்டி என்ற பெயர் வர காரணம் ஆனது,
சுற்றுலா பயணிகளின் ஆரவாரம் இல்லாத அமைதியான பகுதியாக பூண்டி உள்ளது, கேரளா மற்றும் சில முக்கிய பகுதிகளுக்கு இங்கு தான் காய்கறிகள் விவசாயம் செய்யப்பிடுகிறது,
டூரிஸ்ட் ஸ்பாட் என்பதை விட இயற்கையின் அழகு மித மிஞ்சி காணப்படுகிறது, அதை அப்படியே அனுபவித்து அறியவேண்டிய நிறைய விஷயம் இருக்கிறது,
பூண்டி இன்னும் ஊரில் சிறிது நேரம் இருந்தாலும் ஒரு அமைதி நம் உள்ளதை ஆட்கொள்ளும் என்பது சந்தேகமில்லை,
பூண்டி மக்களின் கள்ளம் கபடமில்லா அன்பால் இந்த விவசாயபூமி செழிக்கிறது, ஒற்றுமை, மனிதநேயம், இயற்கையை நேசிக்கும் இந்த மக்களிடம் இருந்து வெளி உலகம் கற்றுக்கொள்ள வேண்டியது தெளிவுபடுத்துகிறது,
இயற்கையை நேசிப்பவர்களுக்கும், பிஸியான வாழ்க்கையிலிருந்து சிறிது நேரம் செலவிட விரும்புபவர்களுக்கும் ஏற்ற இடம்.
மேலும், சிறிது நேரம் செலவழிக்கத் தகுந்த இடமான மன்னவனூரைப் பார்க்க மறக்காதீர்கள்.
கூக்கல் (13 கிமீ), பெரியூர் (14 கிமீ) ஆகியவை பூண்டிக்கு அருகிலுள்ள கிராமங்கள்.
பூண்டி மற்றும் மன்னவனூரில் தங்குவது ஒரு புதிய அனுபவம், மன்னவனூர் சுற்றுச்சூழல் நிச்சயம் உங்களை மெய் மறக்க செய்யும் அனுபவம், ஆனால் அதற்கு நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டும். தொலைதூர இடம் என்பதால் அங்கு ஆடம்பர வசதிகளை எதிர்பார்க்க வேண்டாம்.
கோயம்பத்தூர் - கொடைக்கானல் 172 கிமீ,
திண்டுக்கல் - கொடைக்கானல் 95 கிமீ,
மதுரை - கொடைக்கானல் 115 கிமீ. கொடைக்கானல் முதல் பூண்டி வரை 40 கி.மீ.