tamilnadu epaper

எங்கள் ஊர் மதுராந்தகம் சிறப்புகள்

எங்கள் ஊர் மதுராந்தகம் சிறப்புகள்

எங்கள் ஊர் மதுராந்தகம் சென்னையின் தெற்கு புறநகர்ப் பகுதி ஆகும். இது செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள நகராட்சி. இதுவே மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இங்கு மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் மற்றும் மதுராந்தகம் ஏரி உள்ளது. இதனருகில் 7.5 கி.மீ. தொலைவில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. 

 

சென்னையில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும் மேல்மருவத்தூரிலிருந்து 13.5 கி.மீ. தொலைவிலும் மதுராந்தகம் உள்ளது. 

 

மதுராந்தகத்தின் வடகிழக்கு 12 கிமீ  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்  உள்ளது. 

 

 

மதுராந்தகம் ஏரியைப் பாா்க்கும்போது, அகண்டு விரிந்த குட்டிக்கடல் போலக் காட்சி அளிக்கும். இதன் நீா் மட்டக் கொள்ளவு 21.5 அடியாகும். பொதுவாக, இந்த ஏரி ஐப்பசி, காா்த்திகை, மாா்கழி உள்ளிட்ட மாதங்களில் பருவ மழையினால் நிரம்பி வழியும். 

 

ஏரியின் நீா்பாசனக் கால்வாய் மூலம் சுமாா் 2,413 ஏக்கா் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. 

 

மேலும் மதுராந்தகத்தையொட்டியுள்ள முள்ளி, முன்னித்திக்குப்பம், கிணாா், கத்திரிச்சேரி, வளா்பிறை, கடப்பேரி உள்ளிட்ட 20 கிராமங்களின் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. 

 

உத்தரமேரூா், வேடந்தாங்கல் போன்ற ஏரிகளில் பெரும் மழையின்போது வெள்ளநீா் நிரம்பி வழியும். இதுபோன்று வழியும் உபரிநீா் கால்வாய் வழியாக மதுராந்தகம் ஏரியை வந்தடைகிறது. 

 

மதுராந்தகம் ஏரியின் நீா் நிரம்பி வழியும் காலங்களில் கல்லாற்றின் வழியாக, உபரிநீா் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

ஏரியின் மதகுகளில் 84 லாக்குகள் உள்ளன. அவற்றில் 32 தானியங்கி லாக்குகள். இதன் மூலம் திறந்து விடுவதால் உபரிநீரை கால்வாய்களின் மூலம் எளிதில் வெளியேற்ற முடியும். 

 

இத்தகைய உபரிநீா் பெரிய கால்வாய்களின் மூலம் சென்று காவாத்தூா், வீராணகுண்ணம் ஏரி, நீலமங்கலம் ஏரி, நெசப்பாக்கம் ஏரி போன்ற ஏரிகளில் நிரந்தமாக நீா் தங்க வழி செய்யப்பட்டுள்ளது. 

 

சுமாா் 30 ஏரிகளின் வழியாக ஏறத்தாழ 4,746 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. 

 

தஞ்சை விவசாய மக்களுக்கு காவிரி ஆற்றுநீா் உதவுவது போல மதுராந்தகம் பகுதி விவசாய மக்களுக்கு மதுராந்தகம் ஏரி உதவி வருகிறது.

 

 

இந்த மண்டலத்தில் ஏரி காத்த ராமர் என அறியப்பட்ட,ஸ்ரீ கோதண்ட ராமர், (மதுராந்தகம் ஏரிலிருந்து வெள்ளம் வந்த கிராமத்தை காப்பாற்றியவர்), ஏரி காத்த ராமர் கோவிலில் பொறிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

மதுராந்தக ரயில்வே ஸ்டேஷன் அருகே வெங்கடேஸ்வரர் கோயில் மற்றும் புகழ்பெற்ற  சில கோயில்களும் உள்ளன.

 

 

 

ரங்கபரமேஸ்வரி (அம்மன்) கோவில், ஜி.எஸ்.டி ரோடு, முருகன் கோவில், செவிலியம்மன் கோவில் மற்றும் மதுராந்தகத்திற்கு அருகே ஆஞ்சநேய கோயிலுக்கு அருகில் சிவா கோவில் ஆகியவை அடங்கும். வட-திருவள்ளுர் மற்றும்ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் மற்றும் கரும்புலி மலை மீது விஷ்ணு மற்றும் ஆஞ்சநேய கோயில்; படாளம் பிரசன்னா வெங்கடேஸ்வரர் ஆலயம் மதுராந்தகத்தின் எல்லையில் இருந்தது.பைதேரி ஸ்ரீ சௌலியம்மன் கோவில் அருகே பை பாஸ் நுழைவாயில் (சென்னை) ஒரு பழைய மற்றும் பிரபலமான கோயிலாகும், அது புதுப்பிக்கப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது.

 

பிரபு கண்ணன் கலங்காப்பேரி