எங்கள் ஊர் வெள்ளகோவில் வெள்ளகோவில் திருப்பூர் மாவட்டத்தில், உள்ள ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 12,157 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 40,359 ஆகும். மக்கள்தொகையில் 20,158ஆண்களும், 20,201 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 81.3% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,002 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3438 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 924 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.
எங்கள் வெள்ளகோவில் நகரம் காங்கேயம் வட்டத்தில் உள்ள அழகிய நகராகும்.வெள்ளக்கோவில் கிராம பஞ்சாயத்து 1938 இல் நிறுவப்பட்டது. பஞ்சாயத்து நகரம் 1954 இல் நிறுவப்பட்டது மற்றும் 1963 இல் முதல் தர பஞ்சாயத்து நகரமாக தரம் உயர்த்தப்பட்டது.. பிப்ரவரி 22, 2009 வரை, இந்த நகரம் ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இருந்தது. பின்னர் கோவை, ஈரோடு மாவட்டங்கள் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களாக மறுசீரமைக்கப்பட்டதால் திருப்பூரின் கீழ் வந்தது.இந்த நகரம் காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கும், ஈரோடு மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது.
இது ஒரு தொழில்மயமான நகரம் ஆகும். பாரம்பரிய விவசாயம் பெரும்பாலான மக்களின் தொழிலாக உள்ளது. கரூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல விசைத்தறி நெசவு பெட்ஷீட்கள், தரை விரிப்புகள் மற்றும் பருத்தி பொருட்கள் உள்ளன.
வெள்ளக்கோவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பாரதியார் பல்கலைக்கழகம் கோவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. சேனாதிபதி நல்லம்மை தகவல் தொழில்நுட்பக் கல்லூரியும் அமைந்துள்ளது. மேலும் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, ஏஎன்வி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, சத்யம் மாண்டிசோரி பள்ளி, எஸ்.ஜி. வலசு, ஜெயம் வித்யா மெட்ரிக். மணி. நொடி பள்ளி, பாலா மெட்ரிக். மணி. நொடி பள்ளி, புனிதா அமலா அன்னை மெட்ரிக். மணி. நொடி பள்ளி, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சி மெட்ரிக் மணி நொடி மேல்நிலைப் பள்ளி, பரத் மெட்ரிக் பள்ளி, ஓலப்பாளையம், ஆனந்த வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஞானசம்பந்தர் மெட்ரிக் நடுநிலைப்பள்ளி, புதுப்பை ஆகிய பள்ளிகள் அமைந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் வெள்ள கோவிலும் ஒன்று. 321 கி.மீ. தூரம் கொண்ட கோவை - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூ ரின் ஒரு பக்க எல்லையில் அமைந்துள்ளது வெள்ளகோவில் நகரம். திருச்சி, கரூர் வழியாக திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் கேரளா செல்லும் வாகனங்களுக்கு தவிர்க்க இயலாத பகுதியாகவும் விளங்குகிறது.
வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்பது பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது. காங்கேயம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வெள்ளக்கோயிலில் இயங்குகிறது.
வெள்ளகோவிலில் கரூர் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. அருகிலேயே வேளாண்மை துறை அலுவலகம்,கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், நில வருவாய் அலுவலர் அலுவலகம், சட்டமன்றத் தொகுதி அலுவலகம்,பயணியர் விடுதி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளன.
வெள்ளக்கோவிலில் சிவ லோகநாதர் கோவில் அமைந்துள்ளது.
வெள்ளக்கோவில் பகுதியில் சிவலோகநாதர் திருக்கோவில் பல ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு உணவால் சைவர்களாக உள்ளவர்கள் பூவும் நீரும் கொண்டு இறைவனை வழிபட வகை செய்துள்ளார்கள். பன்னிரு திருமுறைகளை ஒதி சிவனை தினமும் வழிபாடு செய்யப்படுகிறது. நால்வர் குருபூஜைகளும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வாரவழிபாடு பிரதோசம் நடராசர் அபிசேகம் அடியார்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில் எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் ஒவ்வொரு பிரதோஷத்தையொட்டியும் சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் சிறப்பாக நடைபெறும்.
எங்கள் வெள்ளக்கோவிலில் புகழ்பெற்ற வீர குமாரசாமி திருக்கோவில் அமைந்துள்ளது.இங்கு மூலவர் வீரக்குமாரசாமி. 54' உயரங்கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரமும், மூன்று நிலை கொண்ட 35' உயர உள்கோபுரமும் கொண்டுள்ளது.இக்கோயிலில் பொட்டிலி வழிபாடு மிகுந்த சிறப்புப் பெற்றது. இக்கோயிலின் தல விருட்சம் காக்கராட்டான் மரம் ஆகும்.தமிழ் மாசி மாதத்தில் சிவராத்திரி அன்று தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெறும்.
2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தொகுதி மறு சீரமைப்பின்போது, வெள்ளக்கோவில் தொகுதி, காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.விவசாயம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலை, தேங்காய் பருப்பு உலர் களம், கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது. கீழ்பவானி பாசனம் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனம் வாயிலாக விவசாயம் நடைபெறுகிறது. காங்கயத்தில் 700-க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மற்றும் தேங்காய் பருப்பு உலர்களம், 300-க்கும் மேற்பட்ட அரிசி உற்பத்தி ஆலைகள் உள்ளன.
வெள்ளகோவில் பகுதியிலும் கணிசமான எண்ணிக்கையில் தேங்காய் உலர் களங்களும் 5,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களும் உள்ளன.
சசிதரன்
குடியாத்தம்