tamilnadu epaper

எங்கள் வீட்டுப்பூனை!

எங்கள் வீட்டுப்பூனை!


எங்கள் வீட்டுப் பசங்க

டிவி பார்க்கும்போது

எங்கள் வீட்டுப்பூனையும்

சாதுவாய் உட்கார்ந்திருக்கும்

அப்போதெல்லாம்

எங்களுக்குத் தெரியவில்லை

அதுவும் டிவிப் பார்த்து

ரொம்ப கெட்டுப்போச்சென்பது

டாம்&ஜெர்ரி படங்கள்

பல பார்த்த அது

இப்போதெல்லாம்

இரவில் எலிப்பிடிப்பதில்லை

எலியுடன் ஓடிப்பிடித்து

விளையாடிக் கொண்டிருக்கிறது!



-சின்னஞ்சிறுகோபு,

 சிகாகோ.