ஏங்க... இந்த வருடம் கோடை விடுமுறைக்கு என் மூத்த அக்கா சாவித்திரி வீட்டுக்கு நம்ம ரெண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போகலாம்ங்க!" என்று ஈஸ்வரி கேட்க.


கோபால் யோசித்தார்.


 " />

tamilnadu epaper

என் மன வானில்

என் மன வானில்


 "ஏங்க... இந்த வருடம் கோடை விடுமுறைக்கு என் மூத்த அக்கா சாவித்திரி வீட்டுக்கு நம்ம ரெண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போகலாம்ங்க!" என்று ஈஸ்வரி கேட்க.


கோபால் யோசித்தார்.


  "என்னங்க யோசிக்கிறீங்க?... பாவம் என் அக்கா கல்யாணமாகி பதினஞ்சு வருஷமாகியும் குழந்தைப் பேறு இல்லாமல்... வேதனைகளை உள்ளே விழுங்கிக்கிட்டு... வெளியில் சிரித்தபடி வாழ்ந்திட்டிருக்கா... நாம போய் ஒரு பத்து நாள் இருந்தா... நம்ம குழந்தைகளோட அவ சந்தோஷமாய்க் கழிப்பாள் அல்லவா?... காசு பணத்தால வாங்க முடியாத அந்த சந்தோஷத்தை நாம கொடுக்கலாம்ங்க!"


ஒரு சிறிய யோசிப்பிற்கு பின் கோபால் சம்மதித்தார்.


ஆனால் நடந்தது வேறு.


அவர்கள் சாவித்திரி வீட்டிற்குச் சென்ற முதல் நாள் அவள் குழந்தைகளை கண்டு கொள்ளவே இல்லை. அவள் கணவர் மட்டும் அவ்வப்போது கொஞ்சமாய் குழந்தைகளோடு விளையாடினார் அவ்வளவுதான்.


அடுத்த நாள், அதற்கடுத்த நாள், என்று எல்லா நாட்களுமே சாவித்திரி குழந்தைகளைக் கொஞ்சவுமில்லை... குழந்தைகளோடு பேசவுமில்லை....

உச்சபட்சமாய் நான்காம் நாள் குழந்தைகள் ஓடியாடி விளையாடும் போது எதேச்சையாய் சாவித்திரி மீது மோதி விட, "ச்சீய்!... சனியன்களா வெளிய போய் விளையாட வேண்டியதுதானே?" என்று கத்த, ஈஸ்வரி நொந்து போனாள்.


இதற்கு மேலும் அந்த வீட்டில் இருப்பது நாகரீகமில்லை என்பதை உணர்ந்து பத்து நாள் புரோகிராமை வெறும் ஐந்து நாளாக்கிக் கொண்டு வீடு திரும்பினர்.


இரண்டாம் நாள் சாவித்திரி போன் செய்து, "என்ன ஈஸ்வரி நலமா? குழந்தைகள் நல்லாயிருக்காங்களா?" என்று கேட்க.


  "பரவாயில்லையே உனக்கு குழந்தைகள் மீதும் பாசம் இருக்கு போலிருக்கு!" என்றாள் ஈஸ்வரி கிண்டலாக.


  "ஈஸ்வரி என்னைத் தப்பா நினைக்காதே!.. நான் உன் குழந்தைகளைக் கொஞ்சவில்லை... குழந்தைகளோடு விளையாடவில்லை...ன்னு நீ கோபப்படறே... அப்படித்தானே?... நீ புரிஞ்சுகிட்டது அவ்வளவுதான்!... நான் மட்டும் நீங்க இங்கே இருக்கப் போற பத்து நாள் உன் குழந்தைகளோடு சந்தோஷமாய்க் கொஞ்சிக் குலாவி விளையாடி மகிழ்ந்திருந்தால்... பதினோராம் நாள் நீங்கள் திரும்பிச் சென்ற பிறகு நான் அனுபவிக்கப் போகும் வேதனையை நினைத்து பார்த்தேன்.... என்னால் அதை நினைக்கக் கூட முடியவில்லை... அந்த சந்தோஷ நினைவுகளே ஏக்க நினைவுகளாய் மாறி என்னை வாட்டிடும்!... இப்ப... பல நாட்கள் பசியாயிருந்த ஒருத்தனுக்கு பால் பாயாஸத்தோட வாசத்தை மட்டும் காட்டிவிட்டு திருப்பி எடுத்துக் கொண்டு போய் விட்டால் அவன் எவ்வளவு ஏங்குவான்?... எவ்வளவு தவிப்பான்?... அந்த மாதிரி நானும் ஆகி விடக் கூடாதுன்னு தான் என் மனசை இரும்பாக்கிக்கிட்டு நான் குழந்தைகளோடு பேசுவதையும்... பழகுவதையும்... விளையாடுவதையும்... தவிர்த்தேன்!... இது தப்பா ஈஸ்வரி?...சொல்லி ஈஸ்வரி!" தழுதழுத்த குரலில் சாவித்திரி கேட்க,


 போனிலேயே கதறி விட்டாள் ஈஸ்வரி.  


 "என்னை மன்னிச்சிடு சாவித்திரி நான்தான் உன்னைத் தப்பா

நினைச்சிட்டேன்"



-முகில் தினகரன்,

கோயமுத்தூர்