நினைவினில் பிறப்பது
நித்தமும் இனிப்பது..
நேசத்தில் உயிர்பது..
கவிதை.! என்
செயலினில் மூச்சினில்
செம்புல நீரென..
செந்தமிழ் கலந்தததே
கவிதை.!
கற்பனை வானமும்
கனவெனும் கீதமும்
கலந்தது தான்யிந்த
யாக்கை..! அதன்
சொற்களில் சூடேற்றி
சொல் சிலம்பமாடி..
சோர்வினைக் கடப்பதென்
வாழ்க்கை!
புதியதை விரும்பிடும்
பழையதை வணங்கிடும்
புத்துலகம் காண்பதே
கவிதை.! அந்த
பூக்களைப் போலவே
பாக்களும் பூத்திட.. புலர்ந்திடல் ஒன்றேயெம்
வேட்கை.!