காஞ்சிபுரம், மே 17
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு மற்றும் தெற்கு கோபுர வாசல்களில் 300 செல்போன் வைக்கும் வகையில், தானியங்கி லாக்கர் மற்றும் பொருட்கள் பெட்டகம் வசதி செய்யப்பட்டு உள்ளது. செல்போன் லாக்கரில் 10 ரூபாய் கட்டணத்தில் பக்தர்களே செல்போன்களை டிஜிட்டல் பாஸ்வேர்டு வழியாக பாதுகாக்கலாம். தடையை மீறி கோயிலுக்குள் செல்போன் கொண்டு சென்றால், பறிமுதல் செய்யப்படும் என்று என காமாட்சி அம்மன் கோயில் மற்றும் சங்கரமடம் நிர்வாகம் அறிவித்துள்ளன. இந்த செல்போன் லாக்கர் வசதியை சங்கர மடம் மேலாளர் சுந்தரேசன் அய்யர் தொடங்கி வைத்தார்.