என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு ஏதோ யோசனையில் அனிச்சை செயலாக அலுவலகம் புறப்பட்டாள் சுபா.
தினம் காரில் பறந்து செல்பவள் இன்று வீட்டில் எதையோ மறந்து வைத்துவிட்டு வந்தது போல காரை மெல்ல ஓட்டியப்படி சென்றாள்..சரி இருபுறமும் அவளுக்காகவே பூச்சொரியும் பூமரங்களை ரசித்து செல்கிறாளா?..என்றால் அதுவும் இல்லை!
வேறு என்னவாக இருக்கும்?..
"என்ன மேடம்!..ஆபிஸ் வந்தவுடன் சுறு..சுறுப்பாக இருப்பீங்க, இன்னைக்கு ஏதோ
யோசனையில இருக்கீங்க?"
" நான், ஆபிஸ்ல அப்படி இருக்கிறதுக்கு காரணமே
வீட்டுல என் ஹஸ்பண்ட் சுறு..சுறுப்பா இருக்கிறதுதான்!" என்றாள் பளிச்சென்று.
"தெரியாதா மேடம்!.."
" ம்..." இன்னிக்கு ஈவினிங்காது ரமேசுக்கு தொல்லை கொடுக்காமல் எல்லா வேலையும் தானே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்யணும்னு ஒரு முடிவோடு இருந்தாள் சுபா.
மாலை,வேலை முடிந்த கையோடு சிக்கன் பிரியாணி வாங்கிக்கொண்டு
வீட்டுக்குப்புறப்பட்டாள்.
என்றைக்கும் இல்லாத குஷியோடு காரை வேகப்படுத்தினாள்.
கார் போர்ட்டிக்கோவில் வந்து நின்ற வேகத்தில் பிரியாணியுடன் வீட்டுக்குள் ஓடினாள் சுபா.
வீட்டில்.. ரமேஷ் வெஜிடபிள்
பிரியாணியை தன்னுடைய கேட்டரிங் டெக்னாலஜி திறமையை பயன் படுத்தி மணக்க மணக்க செய்து
கொண்டிருந்தான்.
சுபா, எப்படி தான் சைவம் என்பதையும் மறந்து அசைவ
ரமேசை நுரைக்க..நுரைக்க..
காதலித்து ஓடிப்போய் மணந்தாளோ...அதே வேகத்தில் ஓடிப்போய் அவனுக்கு அசைவ
முத்தம் கொடுக்கலானாள்.
சைவம்..மணக்காமல்..அசைவமும் மணக்காமல் காதல் மணம் மணத்தது மாடுலர் கிச்சனில்...
-- அய்யாறு.ச.புகழேந்தி