tamilnadu epaper

குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு

குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு


நாகர்கோவில் ஏப் 8

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 89 மி.மீட்டர் மழை பெய்தது.

குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிந்துள்ளது இந்நிலையில் நேற்று காலை வரை அதிகபட்சமாக பெய்த மழை அளவு:-

நாகர்கோவில் 6.2, கன்னிமார் 6.4, முக்கடல் 7.5, பாலமோர் 13.4, தக்கலை 12.8, அடையாமடை 55.4, மாம்பழத்துறை ஆறு 7.0, ஆணைக்கிடங்கு 5.2, பெருஞ்சாணி 83.0, புத்தன்அணை 80.8, சுருளோடு 54.2,முள்ளங்கினாவிளை 7.2.

அணைகளிலும் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.