tamilnadu epaper

திருச்செந்தூர் கோவிலில் ஏப்.14ல் அதிகாலை ௪மணிக்கு நடை திறப்பு

திருச்செந்தூர் கோவிலில் ஏப்.14ல்   அதிகாலை ௪மணிக்கு நடை திறப்பு


 திருச்செந்தூர், ஏப். 8 -

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ம் தேதி திருச்செந்தூர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

இதுகுறித்து, திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை கமிஷனர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: 


திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், பின்னர் தீா்த்தவாரி, தொடா்ந்து உச்சிகால அபிஷேகம் நடக்கிறது.


காலை 10 மணிக்கு மேல் சண்முகருக்கு அன்னாபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கின்றன. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.