tamilnadu epaper

பல்லடத்தில் ‘பறந்த’ விளம்பர பலகைகள்

பல்லடத்தில் ‘பறந்த’ விளம்பர பலகைகள்


பல்லடம், ஏப். 8--–

பல்லடத்தில் வீசிய சூறைக்காற்றுக்கு, விளம்பரப் பலகைகள் துாக்கி வீசப்பட்ட நிலையில், இனியாவது அதிகாரிகள் விழிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில், வீசிய சூறைக்காற்று காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் பல இடங்களில் முறிந்துவிழுந்தன.

பல இடங்களில், சாலையோரம் மற்றும் பொது இடங்களில், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் எந்தவித அனுமதியும் பெறப்படாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் துாக்கி வீசப்பட்டன.