tamilnadu epaper

குலவிளக்காய்...

குலவிளக்காய்...

மண்ணுக்கு பெருமை சேர்க்கும்
பெண்ணே...
மறுக்காதே நீதான் குடும்பத்தின் கண்ணே...
ஆவதும் உன்னாலே தீயவை
அழிவதும் உன்னாலே

பெண்ணுக்குள் ஏனிந்த பேதம்
தினம்தினம்
மாமியார் மருமகள் வாதம்

மருமகளாய் இருந்துவந்த
மாமியாரே
மாமியாராய் ஆக போகும்
மருமகளே

 நீங்கள் எப்போதும்
 தாய்க்கு மகளாக
மகளுக்கு  தாயாக

குடும்பத்தின் 
குலவிளக்காய் சுடர் விடுங்கள்
                                           
-சுகபாலா
   திருச்சி