சாதிக்கொரு கோயில் சாதிக்கொரு சங்கம்
சாதிக்கொரு கழகம் சாதிக்கொரு வீதி
சாதிக்கொரு தலைவர் சாதிக்கொரு தலைவி
என்றெல்லாம் பாகுபடுத்திட படைத்தவன் கட்டளையா..?
அந்தஸ்து பார்த்து சாதியை வச்சுக்கிட்டு
நீங்களே பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டவர்
தாழ்த்தப்பட்டவர் மேல்சாதி,கீழ்சாதியாய்
அரசு சலுகைகளைப்பெற வன்முறையால்
கலவரத்தை ஏற்படுத்தி வஞ்சனையால்
சலுகைகள் பெறனுமா..
மரம்,செடி,கொடிகளிடம் சாதி இருக்கா ?
பறவைகள் விலங்குகள் சாதி பார்க்கிறதா ?
பள்ளியில் இணைந்து படிக்கும்
குழந்தைகள் சாதி பார்க்கிறார்களா ?
வறுமையில் உலன்றவர்கள் விதவைப் பெண்கள்
வயதானவர்களுக்கு சலுகைகள் வழங்குங்கள்
சாதியை விட்டொழித்து உயிர்களிடத்தில்
மனித நேயத்தை வளர்த்திடுங்கள்
நல.ஞானபண்டிதன்
திருப்புவனம் புதூர்