சென்னை, ஏப். 5–
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் அரசுக்கு என்ன கஷ்டம் என்று அதிமுக உறுப்பினர் தளவாய்சுந்தரம் கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டசபையில் நேற்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பற்றி காரசார விவாதம் நடந்தது. இது குறித்து அதிமுக உறுப்பினர் தளவாய்சுந்தரம் பேசுகையில், சாதிவாரி
கணக்கெடுப்பு நடத்துவதில் எந்தவிதத் தடையும் இல்லை என்பதால் அதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
என்ன கஷ்டம்..
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரகுபதி, சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும், மத்திய பாஜ அரசுதான் அதனை நடத்த முடியுமே தவிர நாங்கள் எடுக்க முடியாது என்று பதிலளித்தார்.
இதற்கு பதிலடி. கொடுத்த தளவாய் சுந்தரம், " 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் பாதகமான தீர்ப்பு வராமல் இருக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிற. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் உங்களுக்கு என்ன கஷ்டம்? என்று கேள்வி எழுப்பினார்.