பறக்க உதவும்
காற்றே"
" />
"பறக்க உதவும் காற்றே" சொல்லைப் போலத் தாவும் சோர்வில் இரையைத் பாவும் அல்லித் தண்டுக் கால்கள் அசையும் போது வேல்கள் நல்ல கூர்மை கோர்க்கும் நாலு இரையைச் சேர்க்கும் வில்லு பாய்தல் என்றே விரைந்து பறக்கும் நன்றே! விட்டம் விட்ட சந்தில் வீடு ஒன்றை ஆக்கும் குட்டிக் குஞ்சைக் காக்க குவித்துச் சிறகைத் தேக்கும் கிட்டே கொஞ்சம் போனால் எட்டி யெட்டிப் போகும் பட்டுச் சிறகை ஏற்ற பறக்க உதவும் காற்றே! -கவிஞர் நம்பிக்கை நாகராஜன் கோவை. Breaking News:
சிட்டுக் குருவி