தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் சென்னை குரோம்பேட்டை, ஸ்ரீ ராஜ கணபதி ஹாலில் நடைபெற்றது. சத்ய மித்ரன் ஆசிரியர், நிறுவனர் வேதம் மற்றும் நகரத்தார் அமைப்பு இணைந்து நடத்திய இந்த பட்டிமன்றத்தின் நடுவர் முனைவர் இதய கீதம் ராமானுஜம் தலைமையில் "இன்றைய காலகட்டத்தில் மனிதம் வளர்கிறதா? தேய் கிறதா? என்ற தலைப்பில் குழஅழகப்பன்,ஜெயலட்சுமி அழகப்பன், மெய்விழி மீனா, ஆதி மாரிமுத்து ஆகியோர் ஒரு அணி
யிலும், சித.திருமுருகன் பாண்டியராஜன், சொர்ணப்பிரியா சிவகுமார் ஆகியோர் மறு அணியிலும் பேசினர். மடைகள் பட்டிமன்ற நடுவர் இதயகீதம் ராமானுஜம் தீர்ப்பு வழங்கினார். விழாவில் மக்கள் குரல் செய்தி ஆசிரியர் சுபாஷ், டாக்டர் ஸ்ரீனிவாசன், சத்தியமித்திரன் ஆசிரியர் வேதம் ராஜ், எழுத்தாளர் வெ.தமிழழகன், தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்
டனர். டாக்டர் வெங்கடேசன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தார். நிகழ்ச்சியில் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.