tamilnadu epaper

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

மதுரை மேற்கு ஒன்றியம் செல்லகவுண்டன்பட்டி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழாளன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் 

செல்லகவுண்டன்பட்டி சரவணன், சிறுவாலை அய்யனார், அலங்காநல்லூர் பரத், ஆகியோர் ஏற்பாட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப், புத்தகம், பேனா, பென்சில், உள்ளிட்ட பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்..