tamilnadu epaper

சுத்தமும்.. சுகாதாரமும்

சுத்தமும்.. சுகாதாரமும்


கேரளத்துக் குப்பைகளைக் கொண்டுவந்து.. தமிழகத்து எல்லைக்குள் கொட்டுகின்றார்!


நீர்நிலையில் சாயநீர் கலந்துயிங்கே காவிரியை ஈரோட்டில் கெடுத்துவிட்டார்..


ஊர்முழுதும் தெருவெங்கும் குப்பைக் கொட்டி.. உயிர்வாழும் உரிமையினை பறித்துவிட்டார்!


யார் இதனைக் கேட்பாரென்று.. கவலையின்றி குப்பையோடு குடித்தனமே நடத்திவிட்டார்!


சுத்தம்தான் சோறுபோடும் என்று சொல்லி கலப்படமே கடமையென மாறிவிட்டார்..


நித்தமிங்ஙே சுத்மின்றி சுகமுமின்றி.. சுகாதாரம் என்னவென்று தெரியாமலே..


பித்தர்களாய் பேதையராய் நாட்டுமக்கள்.. சுத்தம் கிலோ என்னவிலை? என்று கேட்டார்!


இத்தரையில் சுத்தம்தான் சுகாதாரம் என்று உணரும்.. திருநாளும் ஒருநாளாய் பிறந்திடாதோ!


நோய் நொடி வறுமைக்கு மூலாதாரம் தாய்சேய் நலனுக்கும் தடையாய் நிற்கும்.. 


காய் கனியாகாது வெம்பிப் போகும்.. கடைநிலை குப்பையாக இங்கு சேரும்..


ஆய்ந்தவர்கள் அரசாங்கம் முன்னே நின்று.. அன்றாடம் துப்புறவுத் தொழிலாளர்கள்


தேய்கின்ற நிலைமாற்ற உழைக்கும் நாளில்.. தேசமெங்கும் சுகாதாரம் தோன்றும் உண்மை.


-வே.கல்யாண்குமார்