tamilnadu epaper

முதுமை

முதுமை

காலம்தான் தோலுக்கு

வரிகளை சுமத்தியதே!

மனம்தான் மறுகி

அன்புக்கு ஏங்கியதே!


வயதான பின்தான் மனம்

தாய்மையை வேண்டுதே!

வெறுத்த உறவுகளை

மன்னிக்க தோன்றுதே!


சொந்தம் சுற்றமது

பார்க்க மனம் விழையுதே!

ஒரு எட்டு பார்த்துவந்தால்

பச்சைப்பிள்ளையாய் மனசு குழையுதே!


இருக்கும் காலத்தை

அமைதியாக கழித்திடவே!

ஏங்கும் வயோதிகர்க்கு

அளிப்போமே ஆதரவோடு அன்பையே!


-தஞ்சை உமாதேவி சேகர்