பத்து விரல்களையும்
அலைமோதச்செய்யும்
அற்புதக் கலைஞன் நீ
சுண்டு விரலையும் கூட
சுறுசுறுப்பாய் இயக்கும்
அசகாய சூரன் நீ
வெற்றுத் தாள்களை
வரிசையில் அடுக்கி பின் புள்ளியில் வைத்து
விரல்களால் எண்களை எழுத்துக்களை ஒற்றியெடுக்க ஒவ்வொன்றாய்
எழுந்து எழுந்து போய் ரிப்பனை தொட்டபின் அச்சேறும் அதிசயம் நீ
நீலச்சாயம் பூசிய பேப்பரை இடைச்செறுக இரண்டு மூன்று முறை அச்சாவாய்
விரல்களுக்கு தகுந்தாற்போல் எழுத்துக்கள் பதித்திருக்கும்
அற்புத சாதனம் நீ அழகு பெட்டியின் உள்ளே அடங்கிய செல்லம் நீ
மின் கட்டணம் இல்லை
மானிட்டர் தேவையில்லை பழக்கம் மட்டும் போதும்
பாங்காய் தட்டி தட்டி
பின் குத்தி எடுத்து அடுக்கி வைப்போம்
உன்னில் பயிற்சி எடுத்ததால் எனக்கு கணினியை கையாள சுலபமானது உண்மையே
எங்கிருக்கிறாய்? எப்படியிருக்கிறாய்?
ஒருமுறை உன் பொத்தான்களை அழுத்தி
சப்தம் கேட்டிட ஆசை உன்னை வலமும் இடமும் நகர்த்தி பார்த்திட ஆசை
எனக்கு உத்தியோகம் தந்து சற்று வருமை போக்கிய உன்னை உள்ளளவும் மறவேனே
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்