tamilnadu epaper

தண்ணீர் தினம்

தண்ணீர் தினம்


தண்ணீர் தண்ணீர் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை எட்டாக்கனியாக இருக்கிறது இன்று வரை...


பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பாசமுள்ள பாட்டிவரை வரை குடத்துடன் அலைகிறோம் தண்ணீரை தேடி 


எங்க ஊரை சுற்றியும் குளங்கள் உண்டு 

ஆனால் தண்ணீர் தான் இல்லை !


தினமும் காலையில் தொடங்கி மாலை வரை தண்ணீர் எடுப்பது தான் மிகப்பெரிய போராட்டம் 


மழையில்லாமல் வறண்ட குளங்கள், வற்றிபோன கிணறு, தூர்ந்து போன ஆழ்துளை கிணறு இப்படி எல்லாமே மாறிபோச்சு காலநிலை மட்டுமல்ல மனிதர்களும் தான் .


ஊர் உலகத்திற்கும் தண்ணீர் கொடுத்த மக்கள் 

இன்று தண்ணீர் இல்லாமல் பிறந்த மண்ணை விட்டு 

தண்ணீர் இருக்கும் ஊர் தேடி செல்கிறோம் .


காட்சி பொருளாக இருக்கும் குளங்கள், கிணறுகள் ,கால்வாய்கள் எல்லாம் மாறும் போது நாமும் ஊரை நோக்கி செல்வோம்.


தாகம் வரும் போது மட்டும் தண்ணீரை தேடாமல் 

தண்ணீர் போதும் என்ற நிலைவரை தண்ணீரை சேமித்து வைப்போம்.


அனைவருக்கும் தண்ணீர் தின வாழ்த்துகள்.


-கமுதி மு.வெள்ளைப்பாண்டியன்.