ஒரு தந்தையைப் பற்றி மகனும், மகளும் ஒவ்வொரு வயதிலும் நினைப்பது பற்றி...
6 வயதில்...
'என் அப்பாவைப் போல கிடையாதாக்கும்...'
8 வயதில் ...
'என் அப்பாவுக்கு தெரியாதது எதுவும் இல்லை...'
12 வயதில்...
'என் அப்பா நல்லவர்தான்...ஆனாலும் கொஞ்சம் முன்கோபக்காரர் ...'
14 வயதில்...
'என் சின்ன வயதில் அப்பா என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார்...'
18 வயதில் ...
'இந்த நாளைக்கு ஏற்ற மாதிரி என் அப்பாவுக்கு நடந்து கொள்ளத் தெரியவில்லை.சுத்தமாக அவருக்கு ஒன்றுமே தெரிவதில்லை....'
20 வயதில்...
'என் அப்பா ரொம்பவே மோசமாகிவிட்டார். எல்லாவற்றுக்கும் எதிரிடையாகப் பேசுகிறார். எதையும் புரிந்து கொள்வதில்லை...'
23 வயதில்...
'ச்சே! வரவர அப்பாவின் செயல் எதுவும் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அம்மா எப்படித்தான் இவருடன் இத்தனை நாளாக வாழ்கிறாளோ?'
25 வயதில்...
'வர வர அப்பாவுக்கு மூளையே சரியில்லையோ என்று தோன்றுகிறது. எது சொன்னாலும் எதிர்மறையாகவே பேசுகிறார். என்றுதான் இந்த உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறாரோ?'
32 வயதில்...
'ஹ்ம்ம்..என் மகனை என்னால் சமாளிக்கவே முடியவில்லை. நான் சின்ன வயதில் என் அப்பாவுக்கு ரொம்பவே பயப்படுவேன்..'
40 வயதில்..
'என் அப்பா எங்களை மிக ஒழுக்கத்துடன் வளர்த்தார். அந்தப் புரியாத வயதில் அவர் எப்படி எங்களை மிகச் சரியாக வளர்த்தார் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை..'
45 வயதில்...
'அவர் எங்களை எப்படி நல்லவிதமாக உருவாக்கினார் என்பது எனக்கு இன்னும் குழப்பமாகவே இருக்கிறது.ஏன் என்னால் அப்படி முடியவில்லை?'...
50 வயதில்...
'நாங்கள் நான்கு சகோதர சகோதரிகள்..எங்களை வளர்க்க எங்கள் அப்பா ரொம்பவே கஷ்டப் பட்டதை நினைத்துக் கொள்கிறேன். எனக்கு ஒரு மகனையே இன்று வளர்ப்பது கடினமாக உள்ளது.'
65 வயதில்...
'என் அப்பா மிகவும் முன்யோசனையுடன், திட்டமிட்டு எங்களை நல்ல விதமாக உருவாக்கினார். இன்றும் இந்த வயதிலும், தன் வேலைகளைத் தானே செய்து கொள்வதோடு, எந்த கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றலுடன் இருக்கிறார். அது அவரின் மிகச் சிறந்த குணம்'.
இன்றுதான் புரிந்து கொண்டேன். மொத்தத்தில் என் அப்பா மிக மிக உயர்ந்தவர்!
-ராதா பாலு