tamilnadu epaper

தன்னையே கொல்லும் சினம் !

தன்னையே கொல்லும் சினம் !

 கவிஞர் இரா .இரவி .

தன்னையே கொல்லும் சினம் இனி
தன்னை உணர்ந்து தவிர்த்திடு சினம்

குடும்பங்களின் முதல் எதிரி சினம்
குற்றவாளி ஆகிடக் காரணம் சினம்

இழப்பை ஏற்படுத்துவது சினம்
அழிவை ஏற்படுத்துவது சினம்

குடும்பங்கள் பிரிந்திடக் காரணம் சினம்
குழந்தைகள் வாடிடக் காரணம் சினம்

மதியை இழந்தால் வருவது சினம்
மதியை இழக்காமல் இருக்க வேண்டும் தினம்

கொன்று விடும் உன்னை கொடியது சினம்
காக்க வேண்டும் பொறுமை வராது சினம்

சினத்தால் சீரழிந்தோர் நாட்டில் கோடி
சினம் விடுத்து அன்பு செய் வருவார் நாடி

சினத்தின் தொடக்கம் அழிவில் முடியும்
சிந்தனையின் தொடக்கம் சீராக அமையும்

பகுத்தறிவைப் பயன்படுத்தினால் வராது சினம்
பண்பாடு காத்திட்டால் வராது சினம்

உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடு  சினம்
உலகப்பொதுமறை ஓதுவது தவிர்த்திடு சினம்

இன்னா செய்தாரை திருக்குறள் வழி நடந்தால்
இந்த வையகம் முழுவதும்   அமைதி நிலவும் .