tamilnadu epaper

தனிமை

தனிமை

முழுநிலவன்று சாந்திமுகூர்த்தம்;
முதன்முதலாய் பார்க்கிறாள்,

முகநூலில் ஆழ்ந்து
குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருப்பவனை.

எதையோ தேடும் ஆர்வத்தில்
எல்லாம் முடிந்து விடைகண்டு மீள்கின்றனர்;

இயந்திரமாய் தலைகோதும் விரலை  ஆர்வமற்று விலக்கி,
அலைபேசியில் மூழ்கிவிட்டவனிடம்
இருந்து விடுபட்டு

தனிமையுறுத்த வானம் வெறிக்கிறாள்...
சற்றுமுன் இழந்த
கன்னிமையைச்
சபித்தபடி.....

=தனலெட்சுமி பாஸ்கரன், திருச்சி.