அன்பு மகனுக்கு,
நீ நல்லா இருக்கியாப்பா? உம்
பொஞ்சாதி, பேரப்புள்ள எல்லாம் சொகமா இருக்காங்களா?
இன்னும் பத்து, பதினைந்து நாளில் புது வருஷம் பொறக்க போவுதாம்,
இங்க எல்லாரும் பேசுகிட்டாக:
இந்த வருஷம் உனக்கு நெறய
வேலை இருந்ததினால்தான்,
நீ என்ன பாக்க வரலேன்னு எனக்கு தெரியும், நீ அத பத்தியெல்லாம் யோசிக்காத, அம்மா ஒன்னும் நெனைச்சுகிட மாட்டேன்,
இருந்தாலும், இந்த வீட்ல தங்கி இருக்கற என்னைய போல உள்ள கிழடு, கட்டைகளை,
நிறைய பேர் அவங்க கல்யாணம் கட்டிகிட்ட நாள், பொறந்தநாள், தீபாவளின்னு பண்டிகை, விசேஷம்னா வந்து பாத்துட்டு, துணிமணி, சுவீட் கொடுத்துட்டு போவாங்க,
ஆனா, இங்க வந்து போக உனக்கு நேரம் தோதுப்படல,
அதனாலதான் என்ன பாக்க நீ வரலயின்னு எனக்கு தெரியும்,
இருந்தாலும், உன்னய பாக்கணுமுன்னு பெத்த மனசு கடந்து அடிச்சுக்குது,
அடுத்த மாசம் பத்தாம் தேதி உனக்கு
பொறந்த நாள் வருது,
அன்னக்கி நீ இங்க உள்ள
வயசானவங்கள பாக்க வந்தியாணா நானும் அவங்க கூட
தூரமா நின்னு உன்ன பாத்துட்டு திருப்தி ஆயிடுவேன்.
நீ என் மகன்னு அவங்க முன்னாடி காட்டிக்க மாட்டேன்.,
.இந்த ஏழை அம்மாவின் ஆசையை நிறைவேத்துவாயா ? அன்பு மகனே,
இப்படிக்கு,
உன் அன்பு தாய்,
மாரியாத்தா,
அன்பு அனாதை இல்லம்.
சென்னை.
கோபாலன் நாகநாதன்,
சென்னை-33.