tamilnadu epaper

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன் )-02.05.25

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன் )-02.05.25


தமிழ் நாடு இ பேப்பரின் எக்ஸ்பிரஸ் வேகம் இனிமை...

எளிமை... இளமை...

அள்ளுது ஆனந்தம் 

அசத்துது ஆரவாரம்...

ஆசிரியர் குழுவினரின் 

அள்ளக் குறையாத 

ஆர்வத் துடிப்புக்கும்

அறிவார்ந்த முயற்சிக்கும் 

வாசக உள்ளங்களை 

வளப்படுத்தும் 

உன்னதமான உழைப்புக்கும் 

என்றென்றும் வாழ்த்துகள்!

எதிர் காலத்தில் 

இன்னும் பல 

ஏற்றங்கள் உண்டு 

இது நிச்சயம்...

இது சத்தியம்...


இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு...

பாகிஸ்தான் பிரச்னைக்கு...

அமெரிக்காவின் 

பாச வலையில் 

பம்மாத்தும் ஒளிந்திருக்கும்.

பழைய கால அனுபவப் பாடம்...

அதி ஜாக்கிரதையாக 

அணுக வேண்டிய விஷயம் இது...

பயங்கர வாதிகளை மோடி அரசு தப்ப விடாது.

அமித்ஷா வின் ஆவேசம்... ஆக்கப்பூர்வமான அமைதிக்கு ஆண்டவனைத் 

தொழுவோம்...


முன்னாள் மத்திய அமைச்சர் கிரிஜா 

வியாஸ் காலமானார்.

மறக்காமல் முக்கியத்துவம்...

பழமை போற்றும் தமிழ் நாடு இ பேப்பருக்கு ஜே ஜே...

திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் தான்...

மே நாள் நினைவு சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை.

எழுச்சி உரை... சபாஷ் 

சொல்லாமல் இருக்க முடியுமோ?

ஆன்மீகச் செய்திகள் ஆன்ம பலம்...

அன்பால் நன்றி!

பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் வருமா?

மாணவ செல்வங்கள் ஆர்வமுடன் வாசிக்கும் முக்கிய கட்டுரை...


குறைந்தது தங்கம் விலை...

நாளைய விலையை 

யார் அறிவார்?

திடீரென்று உச்சம் தொட்டு உள்ளம் பதை பதைக்க வைக்குமே!

நலம் தரும் மருத்துவம் பகுதியில் கல்லீரல் கொழுப்பு ஆபத்தானதா?

அலசல் கட்டுரை அற்புதம்...

ஆரோக்கியத்திற்கு

உத்தரவாதம்...

அரசியல் செய்திகள் அள்ளுகின்றன.

ஆரவாரமும் பரபரப்பும் அரசியலில் இல்லை என்றால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று அர்த்தம்.

ஆசிரியர் குழுவினர்க்கு மீண்டும் வாழ்த்துகள்!

இலக்கியப் பக்கங்கள் 

இதயத்துக்கு இதம்... இதம்...!

ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி கட்டுரை அடடா ஆனந்தம்...

மாயாண்டி பாரதி வரலாறு படிக்கப் படிக்க பரவசம். பக்தி மணம் கமகம...

பத்திரிகை உலகில் 

புதுமையும் புரட்சியும் 

படைத்து வரும் தமிழ் நாடு இ பேப்பர் வாழ்க 

வளர்க... வளமான சமுதாயத்தை உருவாக்க வழி காட்டும் உன்னத உயரிய முயற்சிக்கு 

மீண்டும் மீண்டும் 

வாழ்த்துக்கள்!



-நெல்லை குரலோன் 

பொட்டல் புதூர்