ரெட்ரோ திரைப்பட விமர்சனம் கண்டேன். திரைப்படம் பார்க்காமலேயே முழு நீள திரைப்படத்தை பார்த்த உணர்வை ஏற்படுத்தியது. எந்தெந்த காட்சியில் ரசிக்க வைக்கிறது, சலிப்படையச் செய்கிறது, திரைப்படத்தின் தொய்வு, பின்னணி இசை, திடீர் திருப்பங்களில் அழுத்தம் இல்லாமை ஆகியவற்றை மிக அழகாகத் தொகுத்துள்ளீர்கள். விமர்சனத்தின் இறுதியில் முதல் பாதி ரொமான்ஸ் காட்சிகளில் இருந்த சுவாரசியமும் இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் இது சூர்யா+ கார்த்திக் சுப்புராஜின் ஒரு சிறப்பான தரமான சம்பவம் என்று சொல்லி இருக்கலாம் என்று இறுதியில் திரைப்படத்தைப் பற்றிய முழு விமர்சனத்தையும் விபரித்திருந்த ரத்தினச் சுருக்கமான பொன்னான வரிகள் என்னை மிகவும் கவர்ந்திழுத்தன.
அன்புடன்
உ.மு.ந.ராசன் கலாமணி
4, சுபி இல்லம் கிழக்குப் பூங்கா தெரு கோபிசெட்டிபாளையம் 638452.
அலைபேசி எண் 9994479931.