tamilnadu epaper

தேநீர்க்கடை

தேநீர்க்கடை

சதாசிவம் அன்றாடம் காலை நடைப்பயிற்சி முடித்தவுடன் வழக்கமான அந்த நடைப்பாதைக்கடையில் தேநீர் அருந்தப்போனார்.

 

   பெருஞ்செல்வந்தரான அவர் ஏன் ஒரு சாதாரண டீக்கடைக்கு

செல்லவேண்டும்?..

 என்ற தன் நீண்டநாள் கேள்வியை அவரிடம் இன்று நேரிடையாகவே கேட்டுவிடவேண்டும் என்ற முடிவோடு அவரின் அறிமுக நண்பர் மூர்த்தி இன்று ஒரு முடிவோடு போனார்..

 

   சதாசிவம் சிரித்துக்கொண்டே சொன்னார்..."இந்த ஏழைப்பாழைகளுடன் தேநீர் அருந்தும் சுகம் இருக்கிறதே அதை அனுபவச்சிப்பார்த்தால்தான் தெரியும் மூர்த்தி!..

இவர்களிடமிருந்துதான் இந்த சிவம் பரமசிவனாக வந்தேன்!" என்று நெகிழ்ந்தப்படி 

சொன்னார் சிவம்!

 

  "ஒரு யோசனை சார்!"..என்றார் மூர்த்தி.

 

"சொல்லுங்கள் மூர்த்தி!"

 

"ஏன், இன்று ஒரு நாள் இங்கு வரும் கையேந்திகளுக்கு காலை உணவு உங்கள் செலவாக இருக்கட்டுமே சார்!"

 

" சிரித்துக்கொண்டே சிவம் சொன்னார் அதை தினம் செய்யத்தான் இங்கு வருகிறேன் மூர்த்தி சார்!"

 

"மூர்த்திக்கு 'பரமசிவனாக' தோன்றியிருந்தார் சிவம்.

    --- அய்யாறு.ச.புகழேந்தி