tamilnadu epaper

தொட்டாச்சிணுங்கி

தொட்டாச்சிணுங்கி


தொட்டவுடன் சுருங்கிக் கொள்ளும் தொட்டாச் சிணுங்கியின் காய், இலை, பூ என அனைத்திலும் மிக அதிகமாக மருத்துவ குணங்கள் இருக்கு. 


இந்த தொட்டா சிணுங்கியை பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் மார்பக கட்டியை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். அதன் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தலாம்.


மார்பக கட்டியைக் கரைக்கும் முறை : 


தொட்டா சிணுங்கி ஒருபிடி எடுத்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி காலை, மாலை குடித்துவர மார்பக கட்டி கரையும்.


பற்று போடுதல் : 


தொட்டா சிணுங்கியை பசையாக்கி கட்டிகள் இருக்கும் இடத்தில் மேல்பூச்சாக போட்டு 2 மணி நேரத்துக்குபின் கழுவிவர மார்பக கட்டிகள் கரையும்.


மருத்துவ நன்மைகள் : 


தொட்டா சிணுங்கியின் தண்டு பகுதியில் முட்கள் இருக்கும். இளம் சிவப்பு பூக்களை கொண்ட இதை தொட்டவுடன் இலைகள் சுருங்கி கொள்ளும். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புத மூலிகை. இதன் காய்கள், இலைகள், பூக்கள் பயனுள்ளதாக விளங்குகிறது.


கிருமி நாசினி : 


வீக்கத்தை கரைத்து வலியை குறைக்கும் தன்மை கொண்டது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நுண்கிருமிகளை அகற்றும் தன்மை உடையது.


கருப்பை பாதுகாப்பு : 


உள் அழற்சியை போக்கும். கருப்பையில் ஏற்படும் வீக்கம், வலியை சரிசெய்யும். வெள்ளைபோக்கு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்தக்கசிவுக்கு மருந்தாகிறது.