மலரென மலரும் மனம்
மதுவென இனிக்கும் குணம்
மழையெனப் பொழியும் சுகம்
கலையென செழிக்கும் தினம்
கனவுகள் விளையும் நிலம்
கற்பனை விரியும் களம்
அன்பில் வளரும் அறம்
இன்பம் பரவும் அகம்
வாய்க்கும் வாழ்க்கை வரம்
சுதி-லயம் சேரும் சுரம்
வந்ததும் தந்ததும் நலமே
வருவதும் தருவதும் வளமே
எண்ணம் உயர்த்தி
இதயம் மலர்த்துவோமே
•••••••••••••••••••••••
கவிஞர் ம.திருவள்ளுவர்
திருச்சி