உன்னையே
ஒரு
நிலவாக்கும்
இரவு❤️
இரவு ..
ஆன்மாவின்
செதில்களைச்
செதுக்கும்
நிலவின்
ஒளியுமிழும்
விழுமியங்களை
தூண்டியியக்கும்
நடுநிசியின்
சுவடுகள்❤️
நிழல்களை
நிலைநிறுத்தி
நிஜங்களின்
புஜங்களின்
யுக்திகளை
அரிதாரமென
பூசி
பூக்கத்தெரிந்த
புத்தம்புது
ரத்தந்தோய்த்த
யுத்தமலர்
நீ❤️
பிரளயமென
இரவின்
ரகசிய
வெளிச்சக்கீற்று ..
சாளர சாகச
நிலவின்
கண்களைப்
பொத்தி
கடந்து
செல்லும்
மஞ்சுமூட்டம்❤️
ஒவ்வொரு
இடத்திலும்
ஒவ்வொரு
முகம்
காட்டும்
மேகவயல்வெளி
மோகத்தீயைப்
பற்றவைக்கும்
குவலய
சாஸ்த்திர
சம்பிரதாய
இஷ்டத்தின்
பரிகாரம்❤️
சரிசரி
எழும்பிப்பிரகாசி
அந்நிலவுக்குஇனி
ஒளி
தரவல்லவள்
தீயே..
நீமட்டுந்தானே❤️
-ஜவஹர் பிரேம்குமார் ❤️
பெரியகுளம்