நித்தமும் மலர்கிறாய்
காதலைச் சொல்கிறாய்
பித்தமும் போனது
சித்தமும் தெளிவானது
அன்னத்தின் வடிவே
கன்னத்தில் அழகே
காந்தவர்ப் பார்வையால்
ஈர்த்திட்டக் காரிகையே
இதயத்தில் தூரிகையால் வரைந்திட்டேன் ஓவியமே
செந்தமிழ்ச் சொல்லெடுத்து படைத்திட்டேன் காவியமே
கார்குழல் தேவதையே
காமனம்பு எய்தவளே
மையலானேன் உன்னிடம்
மாற்றமது என்னிடம்
விழிகளின் வீச்சிலே
சரணடைந்தேன் உன்னையே
நீயில்லாத நேரமெல்லாம்
நெருப்பாற்றில் தகிக்கிறேனே
பனித்துளியாய் வந்துவிடு
உள்ளத்திலே உறைந்திடு
காலமெல்லாம் நீதானே
என் பொன்வசந்தம்
பெ.வெங்கட லட்சுமி காந்தன்.