tamilnadu epaper

பங்கமில்லா பிரேமம் வேண்டும்,

பங்கமில்லா பிரேமம் வேண்டும்,


உன் அன்பு பார்வையில் மலர்ந்திடும் வெள்ளை ரோஜா 

காலங்கள் கடந்தும் நினைவில் நிற்குமே 

கனவிலும் கூட வந்து உன் பிரேமத்தை நவில் வாயா???? 


உன் நினைவுகளிலே நெஞ்சமெல்லாம் பிரேமம் என்ற மலரின் வாசம் வீசுகிறதே....


நெஞ்சம் முழுவதும் நிறைந்து உன் பிரேமத்தை எனக்கு காட்டுவாயா ....

வெளிச்சமாகும் என் வதனம் என்பதை உணர்வாயா??

வேண்டாம் எதிர்மறையான சொற்கள் உன் பிரேமம் நிறைந்த நேர்மறையான சொற்கள் மட்டுமே வேண்டுமே ....


மழைத்துளி என் நினைவுத் துளியில் நீயே நிறைந்து நிற்கிறாய் ....

மறையாத மட்டுமல்ல மறைக்காத பிரேமமும் வேண்டுமே...


பங்கமில்லா உன் பிரேமத்தை உணர்ந்த தருணமே என் அங்கமெல்லாம் சிலிர்த்து உன்னையே நினைத்து வாழ்கிறேனே...



-உஷா முத்துராமன்