tamilnadu epaper

பத்திரப்படுத்தினாள்

பத்திரப்படுத்தினாள்

அந்த வீட்டில் சரியாரய் சாப்பிட்டு இரண்டு நாள் ஆயிற்று ஒரு மாதத்திற்கு முன்பு வரை தினம் ஓயாத சண்டை ஓய்ந்து போயிருந்தது கண்ணம்மாவின் ஐந்து வயது ஒரே மகன் சித்தி வீட்டில் நடப்பது அறியாது கிடந்தான் அழுகையின் கோலம் களைந்தது 

    கண்ணம்மா மட்டும் அடிக்கடி புலம்பிக் கொண்டே இருந்தாள்

   "எத்தனை தடவை படிச்சு படிச்சு சொல்றது இந்த மனுஷன் கேட்டானா வீட்ல காசு நம்பி ஒரே இடத்தில் வைக்க முடியாது என்னையும் புள்ளையும் கொஞ்சம் யோசித்து இருந்தால் இப்படிப்பட்ட காரியத்தை எல்லாம் செஞ்சிருக்கவே மாட்டான் " என தன் புருஷனை குறித்து எண்ணினாள் புலம்பினாள் 

    கூட இருந்த சக்கு சொன்னாள் "ஆமாண்டி கூட இருக்கிற பயலுங்க சும்மா இருக்க மாட்டாங்க மறந்து வாழ நினைச்சாலும் விடமாட்டாங்க சும்மா இருந்த மனுசன வேணாம்னு சொன்ன மனுசன இப்படி இழுத்துட்டு போய் ஆக்கிட்டாங்களே "

    "ஆமா அக்கா அவர் நல்லாதான் இருந்தாரு தினம் ஒழுங்கா சம்பாதிச்சு வந்து காசு என் கையில தான் கொடுப்பாரு எனக்கு ஆச்சரியமா இருந்தது என் புருஷன் தானா திருந்திட்டாருன்னு சந்தோஷப்பட்டு கோயிலுக்கு போய் கடவுளுக்கு நன்றி சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தேன் அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு" என அழுதாள்

     கூட இருந்தவள் "இனி அழாதே உன் பையனுக்கு நீ வாழ வேண்டும் கண்ணீரைத் துடைத்துக் கொள்" என்றாள்

    அன்றைய நியூஸ் பேப்பரை திறந்து பார்த்தாள் வீட்டில் ஒரு போட்டோவும் இல்லாத அவனின் புருஷனின் படம் அதில் கிடந்தது 

   செய்தியின் தலைப்பு கள்ளச்சாராயம் பருகி மரித்தவர்கள் என இருந்தது

    ஞாபகத்திற்கு மிஞ்சிய அவன் படத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தாள் 

 

 

 

கவிமுகில் சுரேஷ் 

தருமபுரி