நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த பன்னீர் பூ என்பது சுண்டைக்காய் அளவில் நிறம் கொஞ்சம் வெள்ளையாக இருக்கும்.
இந்த பன்னீர் பூ ஏராளமான பலன்களை தரும். குறிப்பாக இரத்த கொதிப்பின் அளவை சீராக்குவதற்கு பெரிதும் பயன்படுகிறது.
கணையத்திற்கு நல்லது. இரவில் அருந்துவதால் நல்ல தூக்கம் வரும்.
உடல் எடையை குறைக்க உதவும்.
பலவகையிலும் பயன்படும் இந்த பன்னீர் பூ எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
மதிய வேளையில் ஐந்தாறு பன்னீர்ப் பூக்களை முழுகும் அளவு நீர் ஊற்றி ஒரு சின்னக் கிண்ணத்தில் ஊறவைத்து படுக்கப் போகுமுன் நன்கு கசக்கி வடிகட்டி அந்த நீரை பருக வேண்டும்.
இல்லையேல் இரவு ஊறவைத்து காலையில் பல் துளக்கியதும் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதோடு உடல் எடையும் மெல்ல குறையும்.
சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக வாரத்திற்கு ஐந்து நாட்கள் பயன்படுத்தலாம்.
உங்கள் மருத்துவரின் ஆலோசனையும் கேட்டுக்கொள்ளவும்.
-வி பிரபாவதி
மடிப்பாக்கம்.