புதுமை வந்ததால்
பழமை
புதைந்து போனது.
என்னதான்
இயந்திரங்கள்
தோன்றினாலும்
இயற்கை தந்த
வரத்தை
நாம் மறுக்கமுடியாது
அம்மியில் அரைத்து
விறகடுப்பில்
மண் சட்டியில்
குழம்பு வைத்து
சாப்பிடுகிற சுவை
வேறு எதிலுண்டு.
ஆரோக்கியத்தை
அன்றே
தொலைத்து விட்டோம்
அறுசுவை உணவும்
அகன்று போய்
இன்று
ஆழகால விசத்தை
அமுதமென நினைத்து
ஆயுள் குறைந்து
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இனி வரும்
தலைமுறைக்கும்
இந்த நிலை நீடிக்கும்.
மாற்றுவோம்
மாறுவோம்
நாளைய
தலைமுறையாவது
நலமுடன்
வாழட்டும்!
-கே.எஸ்.ரவிச்சந்திரன்
மணமேல்குடி.